தூத்துக்குடி மக்களின் உயர்த்தியாக போராட்டத்திற்கு பின்பு வேறு வழி இல்லாமல் தமிழக அரசு Sterlite ஆலையை மூடும் அரசாணையை நேற்று வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில் , இன்று காலை அடுத்த கட்ட நடவடிக்கையாக Sterlite ஆலை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலம் திரும்பப் பெறப்படுகிறது என்று சிப்காட் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த ஆணையானது முழுக்க தமிழக அரசின் சட்ட வரம்பின் கீழ் வருவதாகவும் இதை நீதிமன்றம் வாயிலாக தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது . இந்த ஆணையின் மூலம் ‘விரிவாக்கம்’ என்பதற்கான சாத்தியக்கூறு அறவே அற்றுப்போகிறது என்பது உறுதியாகிறது. இதற்கு பிறகு இதை திரும்பப்பெற்றால் மக்களின் கொதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதையும் அரசு உணரும் என்று நம்பப்படுகிறது.
இது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாக பார்க்கப்படுகிறது.
என்றாலும், இப்பொழுது இருக்கும் ஆலையின் மூடலுக்கான இறுதி முடிவு நீதிமன்றத்தில் நடக்க இருக்கும் சட்டப்போரட்டம் தான் நிர்ணயம் செய்யும் என்பதே நிதர்சனம்!