ஆம் நீங்கள் படித்தது சரிதான் . பிரபல கார்ப்பரேட் நிறுவனமான Pepsi, குஜராத்தில் உள்ள உருளை விவசாயிகள் மீது 1 கோடி கேட்டு வழக்கு போட்டுள்ளது.
நீங்கள விரும்பி சாப்பிடும் Lays Chips உண்மையில் Pepsi நிறுவனத்தின் பொருள் ஆகும். அந்த சிப்ஸ் தயாரிக்க ஒரு பிரத்யேக உருளை வகை பயன்படுத்த படுகிறது. அதன் பெயர் FC-5 என்பதாகும். இந்த FC 5 உருளை வகையை Pepsi நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. அதனால் அந்த நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இந்த வகைகளை யாரும் விளைவிக்க முடியாது என காப்புரிமை சட்டம் கூறுகிறது .
இந்த FC 5 வகை உருளையை பெப்சியின் அனுமதியின்றி சில விவசாயிகள் விளைவித்துள்ளனர். அதனை கண்டுபிடித்த நிறுவனம் அவர்கள் மீது 1 கோடி கேட்டு வழக்கு போட்டுள்ளது.
இந்த வழக்கை கண்டு அதிர்ந்த விவசாயிகள் தங்கள் சங்கம் வழியாக இதனை எதிர் கொள்ள தயாராகி உள்ளனர்.
உணவு பொருள்களுக்கு காப்புரிமை சட்டம் வெகு காலமாக சர்ச்சையான ஒரு விசயமாகவே உள்ளது. அது சிறு விவசாயிகளை எவ்வாறு வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்பதற்கு இதுசிறந்த உதாரணம்.
இதற்கு அரசாங்கம் என்ன பதில் சொல்ல போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.