Avengers Endgame Spoilers சொல்லியதால் குத்து வாங்கிய ரசிகர்!


“Avengers Endgame” உலகம் முழுவதும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் “Russo Brothers” இயக்கிய ஹாலிவுட் திரைப்படம். படத்தை பார்த்தவர்கள் வெளியே அந்த படத்தின் கதையை சொல்லாதீர்கள் என்று அதன் இயக்குனர்கள் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் வழியாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால் சமூக வலைதளத்தில் மீம்ஸுகளும் ஸ்டேடஸ்களும் அந்த படத்தை பற்றி பேசிக்கொண்டுதான் உள்ளன.

இந்நிலையில் ஹாங்காங் தியேட்டரின் வெளியே ஒரு ரசிகர் அந்த படத்தை பார்த்து முடித்து வெளியே வந்து மிக சத்தமாக அந்த படத்தின் கதையை கூறினார் என்றும் அதை கேட்ட மற்ற ரசிகர்கள் அவரை தாக்கி ரத்த காயம் ஏற்பட்டதாகவும் ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.

இது ஹாங்காங் Causeway Bay தியேட்டர் வெளியே நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

Taiwan நாட்டு பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

சிலர் இந்த புகைப்படம் ஆதாரமற்றது என கூறியபொழுது அந்த நிகழ்வை நேரில் பார்த்த சிலர் இது உண்மையே என்றும் பதிவிட்டுள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் Spoilers கூறுவதற்கு தியேட்டர் வாயில் சரியான இடம் அல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

Exit mobile version