உலகின் மிக பிரபலமான தொலைதொடர்பு செயலியான வாட்சப், புதிய வசதியாக க்ரூப் வீடியோ சாட்டிங்கை அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை ஒருவரிடம் மட்டுமே வீடியோ கால் செய்யமுடியும் என்று இருந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் வீடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. முதல்கட்டமாக ஒரே நேரத்தில் 4 பேர் இந்த வீடியோ காலில் பேச இயலும்.
இது iOS மற்றும் ஆன்டிராய்ட் இரு OSகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த :
– முதலில் ஒருவரை வீடியோ காலில் அழைக்க வேண்டும்
– பின்பு வலது மேல் மூலையில் ‘add person’ என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்
– புதிய நபர் அந்த அழைப்பபில் இனைந்த பின் மேலும் ‘add person’ஐ க்ளிக் செய்யலாம்
– இந்த நிலையில் யாரேனும் உங்களை அழைத்தால் அவர்களையும் க்ரூப் சாட்டில் இணைய வைக்க முடியும்
அதிகபட்சம் நான்கு நபர்களை ஒரு அழைப்பில் வீடியோ காலில் பேச இயலும். ஆனால் இந்த வசதி பெற இந்த செயலியின் புதிய அப்டேட்டை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பதிவிறக்கம் செய்யுங்கள், நண்பர்களிடம் பேசி மகிழுங்கள் !
உடனுக்குடன் செய்திகளுக்கு news.kakakapo.com இணையதளத்தில் இணைந்திருங்கள்!