Sterlite : கார்ப்பரேட்டுக்கும் மக்களுக்குமான நேரடி போராட்டம்!
2018 மார்ச் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை முத்துநகரம் தூத்துக்குடியில் மாபெரும் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது! அது தூத்துக்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆபத்தை விளைவித்து கொண்டிருக்கும் ‘வேதான்தா’ குழுமத்தின் Sterlite Copper ஆலையை மூட எழும்பிய மக்கள் சுனாமி. சென்ற ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை அனைவருக்கும் நினைவு கூற வைத்தது அந்த மக்கள் எழுச்சி.
தூத்துக்குடியில் எழுந்த மக்கள் எழுச்சிக்கு துணையாக லண்டனில் தமிழர்கள் அந்த Sterlite ஆலையின் CEO Anil Agarwal 20 மில்லியன் டாலர் வீட்டின் முன் பறை அடித்து போராட்டம் நடத்தினர். சமூக வலைதளம் இவ்விரு நிகழ்வுகளையும் கொண்டாடியது!
ஊடகங்கள் பெருமளவில் மறைத்த அந்த போராட்டத்தின் பின்புலத்தையும் Sterlite ஆலையின் கொடு விளைவுகளையும் இப்பொழுது பார்ப்போம்.
தூத்துக்குடியில் Anti Killer Sterlite People Movement என்ற மக்கள் அமைப்பு பல்வேறு போராட்டங்களை Sterlite ஆலைக்கு எதிராக நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை அன்று தூத்துக்குடி நகரிலேயே நடத்த திட்டமிட்டது. வணிகர் சங்கமும் அதற்கு ஆதரவாக அன்று முழு கடையடைப்பு நடத்தியது. வழக்கம் போல காவல்துறை இந்த போராட்டம் நடைபெற முதலில் அனுமதி அளிக்கவில்லை. பின், சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின் மார்ச் 14ஆம் அன்று நீதிமன்றம் திட்டமிட்டபடி போராட்டம் நடத்த அனுமதி அளித்தது.
1996ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Sterlite ஆலையால் அங்குள்ள மக்கள் மூச்சு, தோல் நோய்களாலும் , மயக்கம் போன்ற உபாதைகளாலும் அவதிப்படுவதாக தூத்துக்குடி வாழ் மக்கள் குரல் எழுப்பி வந்தனர். இப்பொழுது திடீரென மற்றொரு புதிய ஆலையினை நிறுவ அந்நிறுவனம் அவசர அவசரமாக களமிறங்கியது. இதன் பின்னனி காரணம் ஆப்பிரக்கா சமீபியாவில் உள்ள அதன் மற்றொரு ஆலை மாசு பிரச்னையில் கோர்ட் பிரச்சனையில் சிக்கியிருப்பதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிறுவனம் Environmental Clearanceஐ முறைப்படி பெறாமல் பொய்யான dataவை கொடுத்து பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போதுள்ள உள்ள ஆலையும் அதன் நச்சுக்கழிவுகளை எந்த ஒரு மாசுக்கட்டுப்பாட்டு முறைகளை கையாளாமல் நகரில் கலப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அங்குள்ள Gulf of Mannar Biosphere Reserve இந்த நேரடி நச்சுக்கழிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி அன்று தூத்துக்குடி மக்கள் 500 பேர் , பெண்கள் குழந்தைகள் உட்பட , உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 14ம் தேதி இவர்கள் அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
Anti Killer Sterlite People Movementஐ சேர்ந்த பேராசிரியர் பாத்திமா பாபு கூறுகையில்:
“அரசியல் பின்புலம் , பெரும் பணபலம் மற்றும் முறை தவறிய வழிகளின் மூலம் Sterlite ஆலை தூத்துக்குடி மக்களின் வாழும் உரிமையை மறித்து திணறடித்துள்ளது. தொடக்கம் முதல் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உதவியால் அனைத்து சட்ட விதிமுறைகளை மீறியள்ளது. இயற்கை, வாழும் உரிமை , வாழ்வாதாரம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து இயற்கை வளங்களும் பாரபட்சமின்றி மாசுபடுத்தப்பட்டுள்ளது. மக்களின் உடல்நிலை மிக மோசமடைந்துள்ளது. தூத்துக்குடி கேன்சரின் தலைநகரமாக மாறியுள்ளது. இதுவே வளர்ச்சி என்றால் அது எங்களுக்கு தேவையில்லை. எங்களின் நிலம் நீர் காற்று மற்றும் உடல்நிலையை திருப்பு தாருங்கள். எங்களை வாழ விட்டாலே போதும்” என்று கூறினார்.
லண்டன் தமிழரான திரு.கார்த்திக் கூறுகையில்:
“UKல் வாழும் தமிழர்கள் அந்த நாட்டின் வாழ்வியலோடு ஒன்றினைந்தாலும் எங்களின் இதயம் இன்னும் தமிழகத்திலேயே உள்ளது. தமிழ்நாட்டிலேயே தமிழரின் வாழ்வை அழிக்க எத்தனிக்கும் செயல்கள் எங்களை மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாக்குகிறது” என்றார்.
இந்த ஆலை நிறுவலை மகாராஷ்டிரா, கோவா, குஜராத் என அனைத்து மாநிலங்களும் மறுத்து விட்ட நிலையில் 1996ஆம் ஆண்டு தமிழகம் மட்டும் அனுமதி அளித்தது. 1996ல் நூற்றுக்கணக்கான மீனவர்கள் காப்பர் கப்பலை துறைமுகத்தில் வழிமறித்து போராடினர். 1997ல் நச்சுப்புகை லீக் காரணமாக அருகில் ரமேஷ் பிளவரில் வேலை பார்த்த 165 பெண்கள் மயங்கி விழுந்தனர், அதில் பலர் பின் கருக்கலைப்பாகி அவதியுற்றனர்.
2013ல் பெருமளவில் நச்சு வாயு பரவி மொத்த தூத்துக்குடியும் பாதிக்கப்பட்டு பல நாள் கடையடைப்பு நடை பெற்றது. அதன் விளைவாக சுப்ரீம் கோர்ட் 100 கோடி நஷ்ட ஈடு வழங்க ஆணையிட்டது. இந்த நிறுவன இயக்குனர் அனில் அகர்வால் இதை லண்டன் stock exchangeல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது அந்நாட்டில் பெரும் எதிர்ப்பை பெற்றது. இந்திய பங்குச்சந்தையில் மோசடி செய்ததால் அது வெளியேற்றப்பட்டது.
வேதான்தா நிறுவனம் பல்வேறு விதமான வரி ஏய்ப்புகளை புத்திசாலிதனமாக செய்து வருகிறது. அதன் மற்றொரு காப்பர் ஆலை ஆப்பிரிக்காவின் zambiaவில் உள்ளது. அங்குள்ள விவசாயிகள் போட்ட வழக்கில் 900கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் அப்பர் ஓடை ஆற்றருகில் அதன் காப்பர் கழிவுகள் இன்றும் கொட்டிக்கிடக்கிறது.
இந்த போராட்டம் இன்று துவங்கப்பட்டதல்ல. இன்று முடியப்போவதுமல்ல. இது நேரடியாக மக்களுக்கும் கார்ப்பரேட்டுக்குமான நேரடி போராட்டம். இதன் வெற்றி இதை படிக்கும் உங்கள் கையிலேயே உள்ளது.
Notes
1. http://www.downtoearth.org.in/news/supreme-court-slaps-rs-100-crore-fine-on-sterlite-for-polluting-environment-40747
2. http://www.heraldscotland.com/news/13058634.Secret_state_lobbying_for_Scots_energy_giant/
3. https://www.actionaid.org.uk/sites/default/files/doc_lib/addicted_to_tax_havens.pdf
4. https://www.theguardian.com/global-development/2016/may/27/zambia-vedanta-water-contamination-villagers-pollution-case-britain
5. http://www.downtoearth.org.in/news/supreme-court-slaps-rs-100-crore-fine-on-sterlite-for-polluting-environment-40747
6. http://www.foilvedanta.org/news/thoothukudi-residents-resist-sterlite-expansion/
7. https://offshoreleaks.icij.org/nodes/82008207
8. www.private-eye.co.uk/registry
For More Details: – Visit
[zombify_post]