புதிய GST அறிவிப்பில் விலை குறைந்த பொருட்கள் எவை?


பல விமர்சனங்கள் , கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு பிறகு தேர்தல் நெருங்கும் வேளையில் நேற்று இந்திய GST கவுன்சில் 88 பொருட்களின் மீது GST வரி விகிதத்தை குறைத்துள்ளது.

எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றின் மூலம் எவ்வளவு விலை குறையும் என்ற விவரங்களை பார்ப்போம்.

முற்றிலும் GST வரி விலக்கப்பட்ட பொருட்கள்:

  • பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள்
  • ரக்சாபந்தன் பண்டிகைக்கான ராக்கி கயிறுகள்
  • மார்பிள், கல் மற்றும் மரத்திலான கடவுள் சிலைகள்
  • துடைப்பம் செய்ய பயன்படும் மூலப்பொருட்கள்
  • பதப்படுத்தப்பட்ட பால்
  • வெற்றிலை
  • தேங்காய் நாரில் செய்த உரம்
  • சிறப்பு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக வெளியிடப்படப்படும் நினைவு காசுகள்

GST 28%- லிருந்து 18%க்கு குறைக்கப்பட்ட பொருட்கள்:

    வாசிங் மெசின்
    குளிர்சாதனப்பெட்டிகள்
    சிறிய திரை உள்ள தொலைக்காட்சி பெட்டிகள்
    வீடியோ கேம்கள்
    வாக்யூம் க்ளீனர்
    வாகனங்களுக்கான ட்ரெய்லர் மற்றும் semi ட்ரெயிலர்கள்
    மிக்சர் க்ரைண்டர்
    ஷேவர் மற்றும் ஹேர் டிரையர்
    தண்ணீர் குளிர்விப்பான்கள்
    தண்ணீர் சுடுவிப்பான்கள்
    பேட்டரிகள்
    இஸ்திரி பெட்டி
    பெயின்ட் பொருட்கள்
  • GST 18%லிருந்து 12%க்கு குறைக்கப்பட்ட பொருட்கள்:
    • கைப்பைகள்
      புகைப்படம் ஓவியத்திற்கான பிரேம்கள்
      Cork மரத்தில் செய்த கலைப்பொருட்கள்
      கல்லில் செய்த கலைப்பொருட்கள்
      அலங்கரிக்கப்பட்ட முக்க்கண்ணாடிகள்
      இரும்பு, பித்தளை, தாமிரம், அலுமினயத்தில் செய்யப்பட்ட கலைப்பொருட்கள்
      கையில் செய்த விளக்குகள்
      காய்கறி, மெழுகில் வார்க்கப்பட்ட கலைப்பொருட்கள்
      மூங்கில் தரைப்பொருட்கள்
      Zip
      கையால் இயக்கப்படும் ரப்பர் ரோலர்
      மண்ணெண்ணெய் அடுப்பு
  • 5% GST க்கு குறைக்கப்பட்ட பொருட்கள்:
    • எத்தனால்
      1000ரூ-க்கு குறைவான காலணிகள்
      திட இயற்கை எரிப்பொருள்
      செனைல் பேப்ரிக் பொருட்கள்
      கைத்தறி பொருட்கள்
      உரத்திற்கு பயன்படும் பாஸ்பரிக் அமிலம்
      1000ரூக்கு குறைவான தொப்பிகள்
      கைத்தறி தரை விரிப்புகள்
      கைத்தறி லேஸ், மணப்பென் அலங்கார பொருட்கள்
      பண்டிகை தோரணங்கள்
  • விலை குறைக்கப்பட்ட பெருவாரியான பொருட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ன. இவை மட்டுமின்றி எந்த பொருளை வாங்கினாலும் அதன் GST என்ன என்பதை தெரிந்துகொண்டு வாங்குவது அவசியமாகும். மேலும் கேள்விகள் இருந்தால் பதிவிடவும்.
  • Exit mobile version