இடம்: தமிழகம், உச்சநீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அடுத்த கட்டமாக இது சட்ட போராட்டமாக உருவெடுக்கும் என அனைவரும் அறிந்ததே.
ஸ்டெர்லைட் நிறுவனமும் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தை அனுகப்போவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் விவாகரத்திற்காக கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
கேவியட் மனு என்றால் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் தமிழக அரசை கேட்காமல் பிறப்பிக்க முடியாது .
அடுத்த சட்டப்போராட்டத்திற்கான ஆயத்தமாக இதை காணலாம். அதே நேரம் தடையை நிரந்தரமாக்க தமிழக அரசு தனது ஆதாரங்களை வலுவாக்கும் செயலில் ஈடுபடுவது அவசியமாகும்.
You must be logged in to post a comment.