அமெரிக்க தமிழ் மன்றம் நடத்த இருக்கும் Sterliteக்கு எதிரான Twitter போராட்டம்


தூத்துக்குடியில் உள்ள உயிர்க்கொல்லி Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு உலக தமிழர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள Orlando எனும் மாகானத்தில் உள்ள தமிழ் மன்றம் twitterல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
பொதுவாக விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளிவரும்பொழுதோ அல்லது கிரிக்கெட் விளையாட்டின் பொழுதோ twitterல் trend ஆவது வழக்கம். சில சமயம் ஏதேனும் சர்ச்சையான விசயங்கள் நடக்கும் வேளையில் அது சம்பந்தப்பட்ட hashtagகள் trend ஆவதும் உண்டு. உதாரணத்திற்கு ரஜினிகாந்த் அவர்கள் கூறிய ‘ஒரு நிமிசம் தலையே சுத்துருச்சு’ என்ற வாக்கியமும் , எச்.ராசா கூறிய பெரியாரின் கருத்துக்கு எதிராகவும் twitterல் trend ஆனது.

அந்த வழியில் இப்பொழுது தீவிரமடைந்து கொண்டிருக்கும் Sterlite போராட்டத்திற்கான Hashtagகளை Trend செய்ய Orlando தமிழ் மன்றம் முயற்சிக்கின்றது. இதில் மிக வித்தியாசமான விசயம் என்னவென்றால் , இந்த twitter trendingஐ சாத்தியப்படுத்த ஒரு வளைத்தளம் உபயோகப்படுத்தப் படுகிறது. அந்த வளைதளத்தின் முகவரி http://www.orlandotamilmandram.org/SterliteTweet.htm என்பதாகும்.
இந்த வளைதளத்தில் Sterliteக்கு எதிரான பல tweetகள் முன்னரே வாக்கியப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், யாருக்கு அதை tweet செய்ய வேண்டும் என்பதை select செய்யவும் ஆவண செய்யப்பட்டுள்ளது. அதில் மீடியா சேனல்களின் Twitter handle, பிரபலங்களின் twitter handle , social mediaகளின் twitter handle என பல options உள்ளது .
உதாரணத்திற்கு , அதில் இருக்கும் லிஸ்ட்டில் இருந்து , நடிகர் விவேக் அவர்களை தேர்வு செய்து ஒரு Sterlite Tweetஐ
“மூடுங்கள்! மூடுங்கள்! மக்களை முடமாக்கும் Sterlite ஆலையை மூடுங்கள்” என்ற tweetஐ தேர்வு செய்து, tweet செய்யலாம்.
இவ்வாறு பல பிரபலங்களுக்கும் பல வாக்கியங்களும் உள்ளன.
இவ்வாறு எளிதான வடிவமைப்பால் பலர் இவ்விசயத்தை எளிதாகவும் உடனடியாகவும் tweet செய்ய முடியும். இதன் மூலம் Sterlite hashtagகளை உலகளவில் trending செய்ய வைக்கவும் முடியும்.அவ்வாறு செய்தால் உலகமே இந்த விசயத்தை பற்றி அறிந்து கொள்ள சாத்தியமாகும்.

அமெரிக்கா சென்று வேலை பார்ப்பதில் பலர் தொழில்நுட்ப துறையிலேயே வேலை செய்கின்றனர். அந்த தொழில்நுட்பத்தை தமிழர் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு துணையாக கொண்டு வரும் Orlando தமிழ் மன்றத்தினை மனதார வாழ்த்துகிறோம்! நீங்களும் அந்த இணையதளத்தில் சென்று Sterliteக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக tweet செய்யுங்கள்!

வளைத்தளம் : http://www.orlandotamilmandram.org/SterliteTweet.htm

Tweet செய்யும் முறை:

1.முதலில் ஓர் பிரபலத்தை தேர்வு செய்யவும்.
2. பிறகு ஒரு Sterlite வாக்கியத்தை தேர்வு செய்யவும்.
3. பின் ஏதேனும் ஒரு Sterlite ஓவியத்தை தேர்வு செய்யவும்.
4. பின் tweet buttonஐ க்ளிக் செய்யவும். அவ்வளவே!

உங்களின் வசதிக்காக அந்த வலைதளத்தின் screenshotகள் குடுக்கப்பட்டுள்ளன.

மேலும் Sterlite போராட்டத்திற்கான தகவல்கள் பெற KakakapoOfficial பக்கத்தை லைக் செய்யவும் , news.kakakapo.com வலைத்தளத்தை காணவும்.


Like it? Share with your friends!

Don't Miss