தூத்துக்குடி மக்களுடன் ஒரு முகநூல் சந்திப்பு ! அவர்கள் கூறுவது என்ன?


முத்துநகரம் தூத்துக்குடியில் Sterlite ஆலைக்கு எதிராக இம்மண்ணை காக்கும் போராட்டம் வீறு கொண்டு எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக நடந்தது வந்த போராட்டம் தற்போது இளைஞர் சக்தி மற்றும் சமூக வலைதளம் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவு உலக தமிழர்கள் அனைவரும் அறிந்து கொண்டு பங்கு பெறும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

இந்த போராட்டத்தின் இதயமான தூத்துக்குடியை சார்ந்த இளைஞர்களிடம் முகநூல் வாயிலாக உரையாடி அவர்கள் எண்ண ஓட்டங்களை கேட்டறிந்தோம். அவர்கள் கூறியது இதோ:

சக்தி ப்ரியா அவர்கள் கூறியது:

“நாங்கள் தூத்துக்குடியில் பத்திரிகை விற்பனை செய்து வருகிறோம். நாங்களே பத்திரிக்கையில் வெளியான Sterlite விளம்பரங்களை பார்த்து அதிர்ச்சியுற்றோம். இதில் இன்னும் ஒரு படி மேலாக “தினகரன்” பத்திரிக்கை 10ரூ Domex Bathroom Cleanerஐ இலவச இணைப்பாகவும், “தினத்தந்தி” பத்திரிக்கை 10ரூ 3Roses Natural Careஐ இலவசமாகவும் விற்பனை செய்தன. ஆனால் மிக மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் அனைத்து பத்திரிக்கை விற்பனையும் சரிந்து விட்டது. Sterliteக்கு எதிராக மக்கள் எடுக்கும் முயற்சிகள் மகிழ்ச்சி அளிக்கின்றன” என்றார். தனது வியாபாரம் நட்டம் அடைந்தாலும் Sterliteக்கு எதிரான போராட்டத்தில் மகிழ்ந்து இருக்கும் இவர், அங்கு இருக்கும் மக்களின் பறந்த மனதை காட்டுகிறது. இந்த போராட்டத்திற்கு தூத்துக்குடி வணிகர் சங்கம் முழு ஆதரவு கொடுத்து கடையடைப்பு நடத்தியது நினைவிருக்கும்.

மேலும் அவரிடம் பேசியபொழுது “Sterlite ஆலையில் பலர் வேலை செய்து வந்தாலும், திடீரென்று அந்த ஆலையின் capacityஐ இரட்டப்பு ஆக்கி விரிவடைய திட்டம் போட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இப்பொழுது இருக்கும் பாதிப்புகள் இன்னும் இரட்டிப்பாகும். இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்” என்றார்.
“போராட்ட செய்தியை கேட்டவுடன் வீட்டிற்கு ஒரு நபரை அனைவரும் அனுப்பி வைத்தனர். இப்பொழுது நினைத்தாலும் சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கிறது “ என்று கூறினார்.

இளைஞர் Jones-னிடம் பேசியபொழுது:

“Sterlite ஆலை அரசாங்க விதிகள் ஒன்றையும் பின்பற்றுவதில்லை. ஊரில் ஏகப்பட்ட மாசு இதனால். இந்த ஆலையுடன் சேர்ந்து பல ஆலைகள் மாசு படுத்திக்கொண்டு இருக்கின்றன. அவை வெளிப்படுத்தும் அமிலவாயுக்கள் காற்றில் நேரடியாக கலப்பதால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. 2013ல் வைகோ வாதாடிய வழக்கில் high court உத்தரவின் பேரில் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் 100கோடி டெபாசிட் கட்டி சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மீண்டும் திறக்கப்பட்டது.
இதை மூட வேண்டும் என்று நாங்கள் பேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்பொழுது இதை இரண்டு மடங்கு விரிவாக்கம் செய்யப்படுவது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆதலால் இதுவரை கிராமத்தில் நடந்த போராட்டம் இப்பொழுது இளைஞர்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கும் வந்துள்ளது”
என்று விரிவாக தெரிவித்தார்!

மேலும் பலர் கூறும் குற்றச்சாட்டு காவல்துறை அரசு அதிகாரிகள் என பலர் பணம் வாங்கிக்கொண்டு ஆலைக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்பதே!

நடக்கும் இந்த போராட்டம் நாளைய தலைமுறைக்கான போராட்டம். வாழ்வாதாரம் சிறக்க போராட்டம் நடத்தியது போக இன்று வாழ்வதற்கே போராட்டம் நடத்தும் நிலை வந்துள்ளது.

மேலும் பற்பல செய்திகளை உடனுக்குடன் அறிந்திட KakakapoOfficial பக்கத்தை like செய்யவும் .


Like it? Share with your friends!

asteroid

0 Comments