டாய்லெட்டையே சிங்கப்பூருக்கு தூக்கி சென்ற கொரிய அதிபர் Kim!


வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங்க் உன்’ உலகின் மிக விசித்திரமான தலைவர்களில் ஒருவர். அவரின் ஒவ்வொரு செயலும் உலக மக்களுக்கு வியப்பையும் நகைப்புமையே ஈட்டியிள்ளது. பல ரகசியங்களும் மர்மங்களும் அடங்கிய மனிதராகவே திகழ்ந்து வருகிறார் கிம்.

வடகொரிய நாடு உலக நாடுகளில் சீனாவை தவிர எந்த நாடுடனும் நட்புறவாக இருந்ததில்லை. குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான நிலையே என்றும் எடுத்துள்ளது . இன்று முதல்முறையாக வரலாற்றில் அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம்மும் இன்று சிங்கப்பூரில் சந்தித்து கொண்டனர். அணு ஆயுதங்கள், வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்பில் வடகொரிய அதிபர் கிம்மை பற்றி இன்றும் பல விசித்திரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த முழு சிங்கப்பூர் பயணத்தில் கிம் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளும் அவருடைய நாட்டிலிருந்தே கொண்டுவரப்பட்டது. அவர் உண்ணும் உணவு கூட அவருடன் வந்த சமையல்காரர்கள் செய்தவையே ஆகும்.

இவை எல்லாவற்றையும் விட மிக விசித்திரமான செயல் அவர் பயன்படுத்திய கழிவறை. ஆம், அவருடைய பயன்பாட்டிற்கு வடகொரியாவிலிருந்து ‘நடமாடும் கழிவறை’ ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அவர் அந்த கழிவறையையே பயன்படுத்தியுள்ளார்.

இதற்காக அவர் பாதுகாவலர்கள் குழு கூறிய காரணம் என்னவென்றால் இது அவரது பாதுகாப்பிற்கான ஏற்பாடாகவும், அவரது கழிவுகள் எதரிகளிடம் சிக்கிக்கொண்டால் அதை ஆய்வு செய்வதன் மூலம் அவரின் உடல்நிலையை குறித்து பல உண்மைகளை கண்டறிய முடியும் என்றும் அதை தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதை கேட்டதும் நீங்களும் இவ்வாறு ரியாக்ட் செய்தால் நாங்கள் பொறுப்பல்ல.

இன்னும் சிறிது காலத்திற்கு இவ்வாறான விசயங்கள் வெளியே தெரிய தெரிய வெகு விரைவில் கிம்மும் மீம் க்ரியேட்டர்களுக்கு கான்செப்ட்டாக உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை!

Don't Miss