ஆம், நீங்கள் படித்த தலைப்பு உண்மையே. இதுவரை யோகா, ஆயுர்வேதம், தின பயன்பாட்டு பொருள் வியாபாரத்தில் இருந்த பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய chat appஐ வாட்சாப்பிற்கு போட்டியாக களமிறக்கியுள்ளது.
அந்த புதிய appன் பெயர் Khimbo ஆகும். பிரபல சாட் ஆப்கள் தரும் பெரும்பாலான வசதிகள் இதிலும் இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆனால் twitterல் இந்த ஆப் பயனிட்டாளர்கள் பலர் தங்கள் அதிருப்தியை தெரிவுத்துள்ளனர். பலரால் இந்த ஆப் டவுன்லோட் செய்த பின்பு OTP எனும் ஒருமுறை பயன்படுத்தும் குறியீடு வரவில்லை என்றும் அதனால் இதை பயன்படுத்த முடியவில்லை என்றும் குறை கூறியுள்ளனர்.
அதற்கு அந்த நிறுவனமும் server பிரச்னையால் இந்த தடங்கல் என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
பாபா ராம்தேவ் இந்த Khimbo appஐ பதஞ்சலி கம்யூனிக்கேஷன்ஸ் என்ற நிறுவன வாயிலாக செயல்படுத்தி வருகிறார்.
சிறிது காலத்திற்கு முன் பாபா ராம்தேவ் BSNLஉடன் இணைந்து பதஞ்சலி நிறுவன பணியாளர்களுக்கென ஒரு பிரத்யேக SIM CARDஐ அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.