தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், துரத்தி வந்த மீம்ஸ்கள்!


இடம் : தூத்துக்குடி

Sterlite போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். அரசியலில் இறங்குவது உறுதி என்று அறிவித்த பின்னர் அவர் செய்யும் முதல் அரசியல் விசிட்டாக இது பார்க்கப்பட்டதால் மீடியா முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது .

அங்கு வந்தடைந்த ரஜினிகாந்தை காண கூட்டம் அலைமோதிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுக்கு எதிராகவும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக அவர் வைத்த முன்னும் பின்னும் முரணான கருத்துகள் குழப்பத்தையும் மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தின.

அதன் வெளிப்பாடாக அனைத்து விமர்சனங்களும் மீம்ஸ் வழியாக இணையத்தில் ட்ரெண்ட் ஆயின. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு!


Like it? Share with your friends!

0 Comments