“டில்லிக்கு ராஜானாலும் மீம் க்ரியேட்டர்ஸ் சொல்லை தட்டாதே” என சொல்லும் அளவிற்கு இன்று சமூக வலைதளம் அதிர்ந்தது. காரணம் , பிரதமர் மோடி வெளியிட்ட ஒற்றை வீடியோ.
சில வாரங்களுக்கு முன் விளையாட்டு வீரர் விராட் கோலி பிரதமருக்கு fitness challenge ஒன்றை விடுத்திருந்தார். அது #HumFitToIndiaFit எனும் hashtagல் ட்விட்டரில் தொடங்கப்பட்ட ஒரு சவால்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாடு முழுவதும் இருந்து வரும் பல பிரச்னைகளுக்கு வாய் திறவாமல் இருக்கும் பிரதமர் இந்த ட்விட்டர் சவாலை ஏற்கிறேன் என கூறியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
எனினும் அதைப்பற்றி எந்த கவலையுமன்றி பிரதமர் மோடி இன்று தான் செய்து வரும் சில உடற்பயிற்சிகளை வீடியோவாக வெளியிட்டார்.
அடுத்த நொடி ஒரு மீம் சுனாமி தமிழகத்திலிருந்து கிளம்பியது. சில மணி நேரங்களில் சமூக வலைதளம் முழுவதும் வித விதமாக பல கோணங்களில் கிரியேட்டிவாகவும் கிண்டல் செய்தும் மீம்ஸ்கள் பரவ தொடங்கின.
அதை தொடர்ந்து வட மாநிலங்களிலும் மீம்ஸ்கள் வெளிவரத் தொடங்கின. அறிவிப்பின்றி வந்த இந்த சுனாமி இன்னும் சமூக வலைதளங்களில் குடிகொண்டுள்ளதாக தெரிகிறது.
அந்த சுனாமியில் உயர்ந்து பறந்த சில அலைகளை இங்கு தொகுத்துள்ளோம்.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது . ” Where There Is Humor, There Is No Fear” , அதாவது எங்கு நகைச்சுவை உள்ளதோ அங்கு பயமிருக்காது என்பதே. அதை மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் மீம் க்ரியேட்டர்களுக்கு எங்களின் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
மரண அடி அடித்த மீம்ஸ்கள் இதோ!
You must be logged in to post a comment.