இடம்: கேரளா
நாடெங்கும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்திக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது:
1. பெட்ரோல் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெயின் விலை கடந்த ஆட்சி காலத்தை விட குறைந்திருந்தும் , அரசின் வரி அதிகரிக்கப்பட்ட காரணத்தால் மக்களுக்கு அதிக விலையுடன் விற்கப்படுகிறது.
2. பெட்ரோல் தினசரி விலையை எண்ணை நிறுவனங்கள்தான் நிறுவுகின்றன என்று கூறி வந்த அரசு , கர்நாடக தேர்தலின் பொழுது மொத்தமாக பெட்ரோல் விலையை ஒரே இடத்தில் வைத்திருந்தது. இது தேர்தலுக்காக அரசின் விதியை அரசே மீறும் என்பதை உறுதிப்படுத்தியது.
3. தேர்தல் வரை இருந்த விலை நிலவரம் தேர்தல் முடிந்ததும் வரலாறு காணாத அளவு விலையை உயர்த்தியது. தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் விலை மும்பையில் லி ஒன்று 82ரூ ஆக உள்ளது.
இதை எதிர்த்து நாடு முழுவதும் மக்களும் எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி #FitnessChallenge ஒன்றை twitterல் Virat Kohliஇடமிருந்து ஏற்றுக்கொண்டார்.
அவ்வழியில் கேரளாவில் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் #FitnessChallengeஐயும் பெட்ரோல் விலை அதிருப்தியையும் ஒருங்கிணைத்தனர்.
அவர்கள் பெட்ரோல் பங்கிலேயே உடற்பயிற்சி செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த படங்கள் உங்கள் பார்வைக்காக இதோ! இவற்றை பகிர்ந்து பிரதமர் அலுவலகம் வரை சென்று சேர உதவிடுங்கள்!
You must be logged in to post a comment.