முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் இன்று சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
இந்திய தலைவர்கள் அனைவரும் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக்கெண்டிருக்கும் வேளையில் நாளை , அதாவது 17.8.2018 , பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பை தமிழக அரசு சற்று நேரத்திற்கு முன் அறிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி பாகுபாடின்றி அனைவராலும் விரும்பப்பட்ட வாஜ்பாய் அவர்களின் மறைவு நாடெங்கிலும் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது சாதனைகளான பொக்ரான் அணுகுண்டு , கார்கில் போர் வெற்றி, தங்க நாற்கர சாலை போன்றவற்றை அனைவரும் நினைவு கூறி நன்றி தெரிவித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.