இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள்!


இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு வீரமும் குருதியும் நிறைந்த ஒரு வரலாறாகும். அதில் மறைக்கப்பட்ட பக்கங்களும் உண்டு , மறுக்கப்பட்ட நீதிகளும் உண்டு.

மொழி இன பேதமின்றி மனிதத்தின் அடிப்படை உரிமை மற்றும் இயல்பான ‘சுதந்திரத்’திற்கான போராட்டம் நடைபெற்ற காலம் அது. அதில் பங்கேற்று இன்னுயிரை நீத்த தமிழர்களின் சிறு தொகுப்பே இது.

தமிழரின் போராட்டம் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு தொடங்கும் காலம் தொட்டே தொடங்கியிருந்தது.

வீரன் அழகுமுத்து, பூலித்தேவன் : ஆண்டு 1750 !

ஆம், 1750களிலிலேயே நடந்த வீரப்போராட்டம் அது. அப்பொழுதே ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தனர். இறுதியில் சிறை பிடிக்கப்பட்டு பீரங்கிகளின் வாயில் கட்டி வைக்கப்பட்டு பீரங்கி குண்டுகள் வெடிக்கவைத்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

இவர்களுக்கு பின், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் போரை தொடர்ந்தனர். அவர்களும் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டனர்.

ராணி வேலுநாச்சியார்:

ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய மாகானத்தின் அரசி. இவர் போர் புரிந்த்து மட்டுமின்றி ஆங்கிலேயரை வென்று நாட்டையும் ஆக்கிரமிப்பிலிருந்து வெற்றிகரமாக மீட்டார்.

குயிலி:

இந்தியாவின் முதல் தற்கொலை படை வீராங்கனை. பலருக்கு இவரின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி. விஜயதசமி நாள் அன்று உடல் முழுதும் எண்ணை பூசி நெருப்பிட்டுக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் புகுந்து அனைத்தையும் அழித்தார்.

இன்றும் இவரை ‘தீப்பாய்ந்த அம்மன்’ என்று சில இடங்களில் கடவுளாய் வழிபடுகின்றனர். உண்மையில் மக்களை காக்கும் எவரும் கடவுளே ஆவர்.

தீரன் சின்னமலை:

தோல்வியையே காணாத வீரர். ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். உண்மை பெயர் ‘தீர்த்தகிரி’. சின்னமலை என்று அன்போடு அழைக்கப்பட்டார். வஞ்சகத்தின் மூலம் வீழ்த்தப்பட்டார்.

வேலூர் சிப்பாய் கலகம், ஆண்டு 1806:

முதல் இந்திய சுதந்திர போராட்ட கலகம் என இன்றும் அழைக்கபடும் ஓர் நிகழ்வு. ஆங்கிலேயரிடம் பணிபுரியும் சிப்பாய்களே கலகம் செய்து போரிட்டு திப்பு சுல்தானின் மகனை அரசராக்க செய்த போர் அது. ஆங்கிலேய கொடியை அகற்றி வேலூர் கோட்டையில் திப்புவின் கொடி ஏற்றப்ட்டது.

தில்லையாடி வள்ளியம்மாள் :

காந்தியடிகள் இந்தியாவை காத்தார். வள்ளியம்மாளோ காந்தியடிகளையே காத்தார். ஆம், தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் காந்தியடிகளை துப்பாக்கியில் சுட எத்தினித்த பொழுது தைரியமாக குறுக்கே புகுந்து எதிர்த்து காத்தார். கோபமுற்ற ஆங்கிலேயர்கள் இவரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர். சிறையில் இவர் இறந்த பொழுது வயது 16 மட்டுமே.

திருப்பூர் குமரன்:

கொடி காத்த குமரன் என்று அழைப்பபடுபவர். கொடியை பிடித்த படியே தடியடியில் உயிர் நீத்தவர்.

வ.உ.சிதம்பரனார்:

கப்பலோட்டிய தமிழர். வக்கீலாக இருந்து பின் இந்தியாவின் முதல் சுதேசி கப்பலை செய்தவர். ஆங்கிலேயர் இவரின் கப்பல் நிறுவனத்தை அழித்து இவரையும் சிறையில் அடைத்தனர்.

பாரதியார்:

தேசிய கவி பாரதியாரை பற்றி நாம் கூறி தெரிந்து கொள்ள தேவையில்லை.

இது போன்று பல தலைவர்கள் தங்கள் வாழ்வையும் உயிரையும் பணயம் வைத்தனர் .

இவை அனைத்துமே ‘சுதந்திரம்’ என்பதற்காக மட்டுமே! அதை பேணி காப்பது நமது அனைவரின் கடமையாகும்.

Don't Miss