மரங்களை வெட்டிய Pothys! வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!


இடம் : சேலம்

சேலத்தில் இருக்கும் போத்தீஸ் துணிக்கடை இன்று மக்களின் கோபத்தை சம்பாதிக்கும் வேலையை செய்துள்ளது. தன் கடை அருகில் இருக்கும் மரங்களை அதன் வாயில் முகப்பை மறைப்பதாக கூறி அந்த மரங்கள் அனைத்தையும் வெட்டிப்போட்டுள்ளது.

ஏற்கனவே மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் இவ்வாறு மரங்களை வெட்டியது கண்டு சேலம் வாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக சுற்றுசூழலை பலி கொடுக்க சற்றும் தயங்குவதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாகவே இது விளங்குகிறது. சிறிய அளவில் இவை நடக்கும்போதே எதிர்ப்பதன் மூலமே Sterlite போன்ற பெரும் முதலைகளை வருங்காலத்தில் தடுக்க உதவும்.

இந்த சம்பவத்தின் பின் போத்தீஸுன் முகநூல் பக்கத்தில் மக்கள் 1* ரிவ்யூ அளிக்க ஆரம்பித்தனர். தங்கள் கண்டனங்களையும் அதில் பதிவு செய்தனர்.

அதோடு மட்டுமில்லாமல் சேலத்தில் செய்தது போலவே மற்ற நகரங்களிலும் மரங்களை வெட்டியதாக கண்டனங்கள் குவிய ஆரம்பித்தன.

இதில் கேலிக்கூத்தான விசயம் என்னவென்றால் அவர்களின் விளம்பரத்திலோ மரக் கன்றுகளை இலவசமாக தருகிறோம் என்று கூறியள்ளனர்.

இந்த முரண்பாட்டை பின்வரும் மீம் ஒன்றே சரியான பிரதபலிப்பை விளக்குகிறது.

இந்த சூழலில் சமூக ஆர்வலர் பியூஷ் மனிஷ் போத்தீஸ் அருகே புதிய மரக்கன்றுகளை நட்டு இந்த மரம் வெட்டும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐந்து மரங்கன்றுகளை அங்கு இன்று நட்டுள்ளதாக முகநூலில் தெரிவித்துள்ளார்.

பணத்திற்காக மரம் வெட்டும் செயல் எங்கு நடந்தாலும் அதை எதிர்க்கவும் தடுக்கவும் செய்வது நமது கடமை என்பதை உணர்ந்து செயலாற்றுவோம்.


Like it? Share with your friends!

0 Comments