மெக்சிகோ அடித்த goalஆல் பதிவான நிலநடுக்கம் ?!


நடந்து கொண்டிருக்கும் கால்பந்து உலக கோப்பை போட்டியில் மெக்சிகோவும் ஜெர்மனியும் மோதின. அதில் மெக்சிகோ அதிரடி வெற்றி பெற்றது. அதை மெக்சிகோ ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். ஆனால் யாரும் எதிர்பாராத ஒன்று அப்பொழுது நிகழ்ந்தது!

ஞாயிறன்று நடந்த போட்டியில் மெக்சிகோ வீரர் Hirving Lozano அடித்த ஒற்றை கோலே அந்த அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. அவர் அந்த கோலை ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் அடித்தார்.

ஜெர்மனி அணி கடந்த 2014 FIFA உலக கோப்பையை வென்றது . அது மட்டுமின்றி தற்பொழுதும் அந்த அணியே தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அவ்வாறான பலம் பொருந்திய அணியை மெக்சிகோ வென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ஏனெனில் மெக்சிகோ தற்பொழுது தரவரிசையில் 15ஆவது இடத்தில் உள்ளது. கிரிக்கெட்டில் Ricky Pontingன் ஆஸ்திரேலிய அணியை பங்களாதேஷ் வீழ்த்தினால் எப்படி இருக்குமோ அவ்வாறான நிலையே இந்த நிலையும்.

அந்த வெற்றிக்கான கோல் அடித்த நிமிடத்தில் மெக்சிகோவில் வியக்கத்தக்க வகையில் ஒரு சிறு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நடுக்கம் மெக்சிகோ மக்களின் ‘mass jumping’னால் நடந்திருக்கலாம் என்று அந்த நாட்டின் அரசாங்கமே கருத்து தெரிவித்துள்ளது .

அந்த ட்வீட் இதோ:

அதில் என்ன கூறியுள்ளது என்றால்,

“Simsa எனும் நிலநடுக்க கண்கானிப்பு மையத்தில் சரியாக 11.32 மணிக்கு ஒரு சிறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ‘Chucky’ என அன்பாக அழைக்கப்படும் மெக்சிகோ வீரர் ஜெர்மனிக்கு எதிராக கோல் அடித்த உடன் பதிவாகியுள்ளது”

என குறிப்பிட்டுள்ளது.

35வது நிமிடத்தில் அந்த வீரர் அடித்த கோலை இங்கே Here காணலாம்.

அரசாங்கமே இதை ஒப்புக்கொண்டுள்ளது வியப்படைய வைத்துள்ளது.! இது தற்செயலாக நடந்திருந்தாலும் ஒரு விறுவிறுப்புக்காக அரசு இதை கூறியிருக்கலாம் . வரும் ஆட்டங்களில் மேலும் பல நிலநடக்கங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

நல்லவேளை நம்ம சீயான் கந்தசாமி சூட்டிங்கை இந்த நிலநடுக்கம் முன்பே முடித்து விட்டார்!


Like it? Share with your friends!

0 Comments