யாருயா இந்த மோமோ? எனக்கே பாக்கனும்போல இருக்கு என்ற ரமணா டயலாக்கை நீங்கள் சொல்லியிருந்தால் நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி இது.
சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தை மோமோ. பல சிறார்களின் உயிரை காவு வாங்கிய Blue Whale Challengeஐ போன்ற ஓர் காவு வாங்கும் ஆபத்தான விளையாட்டே இந்த மோமோ சாலஞ்ச்.
முதன்முதலில் faceboookல் தான் இந்த விளையாட்டு ஆரம்பமானது. பின்பு whatsappல் தற்போது வைரல் ஆகி வருகிறது. Argentina நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் இறந்து போனாள். அந்த மரணத்தை காவல்துறை விசாரிக்கும்பொழுதுதான் இந்த பகீர் விளையாட்டு வெளிச்சத்திற்கு வந்தது.
தெரியாத ஒரு எண்ணில் இருந்து வாட்சப் வாயிலாக பேச ஆரம்பித்து சிறு சிறு taskகளை செய்ய சொல்லி challenge வைக்கப்படும். பின் படிப்படியாக தவறான செயல்களை செய்யச்சொல்லி வற்புறுத்தப்படும். தன்னை தானே துன்புறுத்திக் கொள்வதிலிருந்து மற்றவரை துன்புறுத்தும் செயல்களும் பாலியல் தவறுகளை செய்யத்தூண்டும் செயல்களும் இதில் அடங்கும். அதன் உச்சகட்டமாக தற்கொலை செய்யச்சொல்லி challenge வைக்கப்படும். அவ்வாறு செய்யவில்லை எனில் இதுவரை செய்த அனைத்து தவறுகளையும் எல்லோருக்கும் வெளிப்படுத்தி விடுவோம் என்று மிரட்டல் வரும்.
இறந்து போன அந்த அர்ஜென்டினா சிறுமி இறப்பதற்கு முன் தன் தொலைபேசியை பயன்படுத்தியுள்ளார், இதன் மூலமே இந்த மொத்த ஆபத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொதுவாக பிரேசில் அர்ஜென்டினா போன்ற நாட்டு தொலைபேசி எண்களில் இருந்து வாட்சப் மெசேஜ்கள் இந்த காரியித்தை செய்கின்றன. அந்த எண்களின் profile pictureல் பயப்படும்படியான கண்கள் பெரிதான அகோர உருவமுள்ள ஒரு பொம்மை இருக்கும். உண்மையில் அந்த பொம்மை ஜப்பான் நிபுணர் வருவர் செய்த பொம்மையாகும். அந்த படத்தை இந்த விசயத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் இந்த விளையாட்டு வேறு வடிவம் கொண்டு அலைகின்றது. அதாவது விளையாட்டு என்பதை தாண்டி போன்களை hack செய்து அந்தரங்க விசயங்களை திருடவும் பயன்படுத்துகின்றனர்.
ஆக மொத்தம் மோமோ மட்டுமல்ல தெரியாத எண்களில் வரும் எந்த விபரீத விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பதே உத்தமம்.
இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் மோமோவின் நிலைமை தலைகீழாக உள்ளது. மீம்ஸ்களின் மூலம் மோமோவை கிழித்து தொங்கவிட்டுள்ளனர். மற்ற இடங்களில் அது ஒரு ஆபத்து ஆனால் இங்கு அது வெறும் கான்செப்ட் என ஆகியுள்ளது.
எதுவாயினுனும் அந்த ஆபத்தான விளையாட்டிலிருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் காத்துக்கொள்ளுங்கள்.
You must be logged in to post a comment.