காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் கர்நாடக தேர்தலுக்காக அதை செய்யாமல் இருக்கும் மத்திய அரசின் மீதும் செய்ய வைக்க இயலாத மாநில அரசின் மீதும் பெரும் அதிருப்தி அலை வீசுகிறது. தமிழகத்திற்கென்று வரும்பொழுது மத்திய அரசு காட்டும் மெத்தென போக்கு கடும் கண்டனத்திற்குட்பது. இதில் இப்பொழுது மத்தியில் ஆளும் பாஜக மட்டுமின்றி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விட மாட்டோம் என்று வெளிப்படையாக பிரசாரம் செய்து வரும் காங்கிரசும் சுயநலப்போக்கையே கொண்டுள்ளன.
மாநில கட்சிகளில், ஆளும் அதிமுக அரசோ ‘தற்கொலை செய்துகொள்வோம்’ ஆனால் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் என்று அடிமைத்தனமும் பைத்தியக்காரத்தனமும் சேர்ந்த கலவையாக உள்ளது. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியான திமுக வோ இந்த அடிமை அரசை வலு கொண்டு எதிர்க்க திராணி அற்றதாகவும் தனது கூட்டனி கட்சியான காங்கிரசு வாரியம் அமைக்கமுடியாது என்று கூறுவது காதில் விழாதது போலவும் இருக்கிறது. அவர்களில் ஒருவர் கூட ராஜினாமா இன்று வரை செய்யவில்லை.
இதனிடையே சமூக வலைதளத்தில் “கவலை வேண்டாம் , மெரினாவில் போராட மட்டும் அனுமதி கொடுங்கள் ! நாங்கள் பார்த்து கொள்கிறோம்!” என்ற இணைய தலைமுறையின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
இதனிடையே மாநில அரசோ எங்கே போராட்டம் மூண்டு விடுமோ என்று அச்சத்தில் மெரினாவில் 250 போலீசாரை நிறுத்தியது.
ஆனால் திடீரென்று சற்று நேரத்திற்கு முன் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பதாதைகளுடன் மெரினாவில் கோசம் எழுப்பினர். அவர்கள் கடற்கரையோரம் நின்று கொண்டு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். காவல்துறை கண்களில் மண்ணை தூவி அவர்கள் போராட்டத்தில் இறங்கியது ஆனந்த அதிர்ச்சியை அளித்தது.
செய்தியை கேட்டவுடன் பலர் சமூக வலைதளங்களில் நாங்களும் வருகிறோம் என்று கிளம்பி வருகின்றனர். ஏற்கனவே Sterliteக்கு எதிரான போராட்டம் வலுத்து கொண்டிருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான பிரச்னை வெடித்துருப்பது மத்திய மாநில அரசின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.இந்த போராட்டம் எவ்வாறு உருவெடுக்கும், மாநிலம் முழுவதும் பரவுமா, காவல்துறை மீண்டும் வன்முறையை கையாளுமா என்பது இனனும் சில துளிகளில் தெரிந்துவிடும்.
UPDATE : சற்று முன் கிடைத்த தகவலின்படி அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் விசரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அடுத்து இவ்வாறு போராட்டம் நடைபெற கூடாதென்று அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு நிலவுகிறது.
அதன் உச்சகட்டமாக காவல்துறை மெரினாவிற்கு பூட்டு போட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியற்ற வலைதள வாசிகள் #OpenMarina என்ற hashtagஉடன் பதிவிடுகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள news.kakakapo.com தளம் பார்க்கவும் , KakakapoOfficial பக்கத்தை லைக் செய்யவும்.
You must be logged in to post a comment.