தொடங்கியது தென்மேற்கு பருவமழை! என்ஜாய் பண்ண ரெடியா இருங்க!


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் தொடங்கியது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கடல் சீற்றமாக காணப்படுகிறது.

கேரளா மற்றும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பெருமளவு மழையைக் கொடுக்கும் தென்மேற்கு பருவமழை மே கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டில் சரியான நேரத்தில் தொடங்கியுள்ள பருவமழை அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.

கேரளாவில் திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் மாலை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பருவமழை காரணமாக தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

மக்கள் அனைவரும் வரும் மழையை ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் உள்ளனர்.

அது வரும் வரை தென்மேற்கு பருவக்காற்று பாடலை கண்டு ரசியுங்கள்!

அது முடிந்ததும் மழை பட பாடலையும் கண்டு மழையை ரசியுங்கள், மழை வந்ததும் அதில் நனைந்து மகிழுங்கள்!


Like it? Share with your friends!

0 Comments