சட்டசபையில் இன்று நடந்த கருப்பு சட்டை காமெடி!


சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுகவினர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

இதற்கிடையில் இதனையறியாத தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ சத்யா யதேச்சையாக கருப்பு சட்டை அணிந்துவந்தள்ளார். இதை கண்டவுடன் சட்டப்பேரவையே பரபரப்படைந்தது.

ஏற்கனவே அதிமுக MLAக்களில் EPS அணி, OPS-மதுசூதன் அணி, தினகரன் அணி என்ற பல அணிகளும் யாரும் அறியாத sleeper cellகளும் இருப்பது அனைவரும் அறிந்ததே. 18 MLA தகுதிநீக்க வழக்கும் இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இதற்கிடையில் திமுகவை போன்றே இந்த அதிமுக MLA கருப்பு சட்டை அணிந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சலசலப்பை பார்த்து சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்.எல்.ஏ புது வெள்ளை சட்டை ஒன்றை எடுத்துவரச்சொல்லி , அது வரும் வரை வெளியே காத்திருந்தார்.

அது வந்த பின்பே சட்டையை மாற்றிக்கொண்டே இருபது நிமிடம் கழித்து பேரவைக்குள் வந்தார். இந்த சம்பவத்தை கண்டு சபைக்குள் எங்கும் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர்.


Like it? Share with your friends!

0 Comments